தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்து உள்ளார். மெகா ஸ்டார் சிரஞ்சீவி டோலிவுட்டில் பெற்ற புகழும் சாதனைகளும் எண்ணிலடங்காதவை.
கடந்த 46 ஆண்டுகளாக சிரஞ்சீவி டோலிவுட்டில் ஈடு இணையற்ற ஆதிக்கத்தை வெளிப்படுத்தி வருகிறார். தற்போது மெகாஸ்டாரின் நடனத்திற்கு கின்னஸ் உலக சாதனை கிடைத்துள்ளது.
திரைப்படங்களில் அதிக பாடல்களுக்கு நடனமாடிய நடிகராக சிரஞ்சீவி வரலாறு படைத்துள்ளார். இதன் மூலம் கின்னஸ் உலக சாதனையுடன் சிரஞ்சீவியை கௌரவித்தனர். இதற்காக ஹைதராபாத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு சிரஞ்சீவிக்கு கின்னஸ் உலக சாதனை விருது வழங்கப்பட்டது.