தேர்தலுக்கு முன்னர் நாட்டை விட்டு வெளியேறினார் பசில்: துபாயில் இருந்து அமெரிக்கா செல்ல முடிவு

0
71

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ச இன்று (20) அதிகாலை நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து இன்று அதிகாலை 03.05 இற்கு Emirates விமானமான EK-649 இல் துபாய் நோக்கி புறப்பட்டதாக விமான நிலைய தவல்கள் தெரிவிக்கின்றன.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள “கோல்ட் ரூட்” முனையத்தை பயன்படுத்துவதற்கும் அவர் 206 அமெரிக்க டொலர்களை செலுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும் பசில் ராஜபக்ச துபாய் சென்று அங்கிருந்து அமெரிக்கா செல்லவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை மேலும் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளியேறவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிகிக்கின்றன.