தேர்தல் வரலாற்றில் வவுனியா பிரதேசத்தில் அதிகளவான சுவரொட்டிகள் அகற்றப்பட்டமை இதுவே முதல் தடவை என வவுனியா பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
வவுனியாவில் மாநகர சபை மற்றும் ஏனைய கூலித்தொழிலாளர்களால் ஒட்டப்பட்டிருந்த பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட சுவரொட்டிகளை வவுனியா பொலிஸார் தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்த தினத்தன்று அகற்றியுள்ளனர்.
ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நாளிலிருந்து வவுனியா பிரதேசத்தில் ஒட்டப்பட்டிருந்த 25,000க்கும் மேற்பட்ட சுவரொட்டிகள் பொலிஸாரின் தலையீட்டினால் அகற்றப்பட்டுள்ளன.
இதேவேளை வவுனியா நகரில் சுற்றித்திரியும் ஆடு மாடுகள் அதிகளவான சுவரொட்டிகளை தின்றுவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
வவுனியாவில் ஒட்டப்பட்டிருந்த வர்த்தக சுவரொட்டிகளின் மேல் அரசியல் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டதன் காரணமாக அரசியல் சுவரொட்டிகள் அகற்றப்பட்டபோது பெருமளவிலான வர்த்தகச் சுவரொட்டிகளும் அகற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.