தேர்தலுக்கான பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்: தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் ஜனாதிபதி உத்தரவு

0
72

தேசிய பாதுகாப்பு சபையின் கூட்டம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தில் ஜனாதிபதித் தேர்தலுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு பாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் வேட்பாளர்களின் பாதுகாப்பு மற்றும் வாக்குச்சாவடிகள், வாக்கு எண்ணும் மத்திய நிலையங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் உத்தரவிட்டுள்ளார்.

பொது மக்களின் அன்றாட செயல்பாடுகளை வழமைபோன்று முன்னெடுத்துச் செல்வதை உறுதிப்படுத்துமாறும் ஜனாதிபதி இந்தக் கூட்டத்தில் பாதுகாப்பு தரப்பினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.