சென்னையில் இன்று காலை வீசப்பட்ட சூட்கேஸில் பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை துரைப்பாக்கத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.
பெண்னை வேறு இடத்தில் கொலை செய்யப்பட்டு சூட்கேஸ் துரைப்பாக்கத்தில் உள்ள தகவல் தொழில்நுட்ப வளைவை ஒட்டிய குடியிருப்பு பகுதியில் வீசப்பட்டிருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.
“நாங்கள் அதிகாலையில் இருந்து அதில் ஈடுபட்டுள்ளோம். குற்றம் வேறு ஏதாவது இடத்தில் நடந்திருக்கலாம் என்றும், உடல் இங்கு வீசப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேக வெளியிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் ஒருவரை கைது செய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில் குறித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.