அடுத்த ஆண்டு (2024) நடைபெற உள்ள இந்தியன் பிரீமியர் லீக் (IPL) போட்டிக்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதன்படி ஐபிஎல் போட்டிக்காக வீரர்களை ஏலம் எடுக்கும் நிகழ்வு இன்னும் சில நாட்களில் நடைபெற உள்ளது.
இதுவரையில் இடம்பெற்ற ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் அதிக கிண்ணங்களை வென்றுள்ளன.
இவ்வாறான நிலையில் விநாயகர் சிலையின் பாதத்தில் ‘ஈ சாலா கப் நமதே ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் – 2025’ என்று எழுதப்பட்ட கடிதத்தினை இரசிகர் ஒருவர் வைத்து வழிபாடு செய்துள்ளார்.
இது தொடர்பான காணொளி தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. ஐபிஎல் தொடர்பில் 9 முறை பிளேஆஃப் சென்று 3 இறுதிப் போட்டிகளில் விளையாடிய பெங்களூர் அணி இதுவரை ஒருமுறை கூட கிண்ணத்தை வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.