நாட்டில் பலரைக் கொலைசெய்து நாட்டை வங்குரோத்து நிலைக்கு கொண்டு சென்றவர்கள் அநுரகுமார திசாநாயக்க குழுவினரே என தாயக மக்கள் கட்சியின் அருண் சித்தார்த் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தற்போது அநுரகுமாரவிற்கு மிகப்பெரிய மக்கள் அலை இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் அவருக்கு வாக்களிக்க முன்னர் இங்கு எத்தனை பேரை அவர்கள் கொன்று குவித்தார்கள் என்பதனை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், கல்லூரி அதிபர்கள், படித்த இளைஞர்களின் பலரைக் கொன்று குவித்த அவர்களுக்கு வாக்களித்தால் நாடு எவ்வாறான நிலைக்குச் செல்லும் என்பதை நினைவில் கொள்ளவும்.
அது மாத்திரமன்றி நாட்டை இந்த நிலைக்கு கொண்டு சென்றவர்களில் சஜித் பிரேமதாச, ரணில் விக்கிரமசிங்க போன்றவர்களும் உள்ளடங்குகின்றனர்.
எனவே வாக்களிக்கும் மக்கள் இது தொடர்பிலே சிந்தித்து செயலாற்ற வேண்டும். அனுரகுமார திசாநாயக்காவிற்குப் பின்னால் இரண்டு நாடுகள் இருந்து அவர்களை இயக்குகின்றது. அதன் ஊடாகவே அவர்கள் அதிகளவான நிதிகளை கொண்டு இந்த தேர்தலிலே பிரச்சாரம் செய்கிறார்கள்
அவர்கள் ஆட்சிக்கு வந்தால் மீண்டும் நாடு ஆறு மாதத்தின் பின் கோட்டபாய ராஜபக்சவுக்கு நடந்தது போலவே ஒரு மிகப்பெரும் கலவரம் ஏற்படும் என்பதை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.” என்றார்.