பதவி விலகினார் டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால்

0
144

ஊழல் வழக்கில் பிணையில் விடுவிக்கப்பட்ட டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் (Arvind Kejriwal) தமது பதவியிலிருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் கடந்த ஜூன் 26ஆம் திகதி அவர் கைது செய்யப்பட்டார்.

குறித்த வழக்கில் கடந்த 13ஆம் திகதி அவர் டெல்லி (Delhi) மேல் நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டார். நேற்று முன்தினம் ஆத்மி கட்சி நிர்வாகிகளுடன் கலந்துரையாடிய அவர் 48 மணிநேரத்துக்குள் தாம் பதவி விலகப்போவதாக அறிவித்திருந்தார்.

இந்தநிலையில் டெல்லி துணை நிலை ஆளுநரைச் சந்தித்து (17) மதியம் தமது பதவி விலகல் கடிதத்தை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கையளித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.