C.I.D சகுந்தலா மாரடைப்பால் உயிரிழப்பு!

0
201

பழம்பெரும் நடிகையான சி.ஐ.டி சகுந்தலா மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். 85 வயதாகும் இவருக்கு இறுதி சடங்கு இன்று புதன்கிழமை மாலை நடைபெறவுள்ளது.

இவர் 1960ஆம் ஆண்டில் கைதி கண்ணாயிரம் எனும் திரைப்படத்தில் நடனக் கலைஞராக அறிமுகமாகி தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்தார்.

1970ஆம் ஆண்டில் சி.ஐ.டி சங்கர் எனும் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சி.ஐ.டி சகுந்தலா என்ற அடைமொழியுடன் அனைவராலும் அழைக்கப்பட்டார்.

மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட 600க்கும் அதிகமான திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். 1998ஆம் ஆண்டுக்குப் பின்னர் சினிமாவிலிருந்து விலகினார்.

அதனைத் தொடர்ந்து பல சின்னத்திரை தொடர்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தார். இந்நிலையில் இவரது மறைவுக்கு திரைத்துறையினர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.