புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளை வாட்ஸ்அப்பில் அம்பலப்படுத்திய ஆசிரியர்?

0
35

சமீபத்தில் நடந்து முடிந்த 5ம் தர புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் வட்ஸ்அப் செயலி மூலம் பரிமாறப்பட்டுள்ளதாகப் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் குற்றம் சாட்டியுள்ளார். அநுராதபுரம் மாவட்டத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் இருந்து குறித்த வினாத்தாள் கசிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த வினாத்தாளுக்கு நிகரான வினாத்தாள் அலவ்வ பகுதியில் மேலதிக வகுப்புகளை நடத்திவரும் ஆசிரியர் ஒருவரால்,  வாட்ஸ்அப் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகப் பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் வினாத்தாளைத் தயாரித்த உரிய அதிகாரிகள் குழுவிடம் இன்று (17-09-2024) விசாரணை நடத்தப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.