ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து நாமல் ராஜபக்ஷவை விலக்கிக் கொள்ளுமாறும், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு கட்சியின் ஆதரவை வழங்குமாறும் வணக்கத்துக்குரிய தொடம்பஹல ராகுல தேரர் இன்று (16) முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பில் இன்று (16) இடம்பெற்ற மாநாட்டிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். சுயேச்சை ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றிக்கான மாநாடு இன்று பிற்பகல் நாரஹேன்பிட்டி அபயராம விகாரையில் நடைபெற்றது.
தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், தற்போதைய சூழ்நிலையில் இந்த நாட்டை வழிநடத்தக்கூடிய ஒரே தலைவர் ரணில் விக்கிரமசிங்க மட்டுமே என்று குறிப்பிட்டார்.