ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்திற்காக விமானங்கள் பயன்படுத்தப்படுவதாக வெளியான தகவல்களுக்கு இலங்கை விமானப்படை (SLAF) பதிலளித்துள்ளது. இலங்கை விமானப்படை எக்ஸ் தளத்தில் இதனை தெளிவுப்படுத்தியுள்ளது.
நிலையான நடைமுறைகளைப் பின்பற்றி, கட்டண அடிப்படையில் விண்ணப்பதாரர்களுக்கு விமானங்கள் வழங்கப்படுவதாக பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்கள் விமானங்களைப் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. பிரச்சார நடவடிக்கைகளுக்கு அரச நிதி மற்றும் வளங்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் அதற்கு விமானப்படை தற்போது பதிலளித்துள்ளது.