குக் வித் கோமாளி 5 பைனல் முடிந்தது: வெற்றியாளர் யார் தெரியுமா?

0
105

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி சீசன் 5 தற்போது முடிவுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாரம் செமி பைனல் ஒளிபரப்பப்பட்ட நிலையில் அதில் சுஜிதா இறுதிப் போட்டிக்கு முதல் ஆளாக சென்றிருந்தார்.

இந்நிலையில் தற்போது இறுதிப் போட்டிக்கான படப்பிடிப்புகள் முழுமையாக நிறைவடைந்துள்ளதாக கூறப்படுகின்றது. இதில் யாரும் எதிர்பாராத வகையில், விஜே பிரியங்கா வெற்றிபெற்றுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும் உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை. குக் வித் கோமாளி சீசன் 5 இல் போட்டியாளராக பங்கெடுத்துள்ள விஜே பிரியங்கா தற்போது பெரும் சர்ச்சைகளுக்கு ஆளாகியுள்ளார்.

இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருந்த மணிமேகலை அண்மையில் இந்த நிகழ்ச்சியில் இருந்து திடீரென வெளியேறியிருந்தார்.

தன்மானம் தான் தனக்கு முக்கியம் எனவும், தனது பணியில் மூன்றாம் நபரின் தலையீடுகள் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்து அவர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதாக கூறியிருந்தார்.

விஜே பிரியங்காவுக்கு பயந்து மரியாதை கொடுத்து பணியாற்ற தன்னை பணித்ததாகவும் தான் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற பிரியங்காவே முழு காரணம் எனவும் மணிமேகலை குற்றம் சுமத்தியிருந்தார்.

இதனையடுத்து பிரியங்காவுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியதுடன் சமூக ஊடகங்களில் அவரை வசைப்பாடியிருந்தனர். அதேநேரம் மணிமேகலைக்கு பெருகிய ஆதரவு கிடைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.