முதல் பொருளாதாரக் கொலையாளி மக்கள் விடுதலை முன்னணியினரே: பொது மக்கள் ஐக்கிய உள்நாட்டுக் கட்சி குற்றச்சாட்டு

0
39

இலங்கையின் முதல் பொருளாதாரக் கொலையாளி மக்கள் விடுதலை முன்னணி ஆகும். அவர்கள் 1989 இல் நாட்டில் ஒரு பயங்கரவாதக் கிளர்ச்சியை உருவாக்கினர். நாட்டின் பொருளாதாரம் முடங்கியது. இளைஞர் சமூகம் கொல்லப்பட்டது.”

– இவ்வாறு பொதுமக்கள் ஐக்கிய உள்நாட்டுக் கட்சியின் பொதுச்செயலாளர் இந்திக்க எஸ். ஹெட்டியாரச்சி தெரிவித்தார்.

கொழும்பு பிளவர் வீதியிலுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில்,

“தேசிய மக்கள் சக்தியில் இருந்து முன்வந்துள்ளவர் ஜே.வி.பியினால் உருவாக்கப்பட்ட அநுரகுமார திஸாநாயக்க என்ற பொம்மை என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

அத்துடன், ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து முன்னிறுத்தியுள்ள சஜித் பிரேமதாஸ, அரசியல் குடும்பத்தால் வளர்க்கப்பட்டவர் என்றே கூற வேண்டும். அவர்களால் இந்த நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது.

எனவே இந்த நாட்டைக் கட்டியெழுப்பக் கூடிய ஒரே தலைவர் ரணில் விக்கிரமசிங்கவே. அவருக்கே அனைத்து இன மக்களும் எதிர்வரும் 21ஆம் திகதி வாக்களிக்க வேண்டும்.” – என்றார்.