தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு தடை போடும் பொலிஸார்

0
39

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை கோரி யாழ்ப்பாண பொலிஸாரினால் யாழ். நீதவான் நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தியாக தீபம் திலீபனின் 37ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நாளை 15ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது.

அந்நிலையில், யாழ்ப்பாண பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த தடை விதிக்க கோரி யாழ் நீதவான் நீதிமன்றில் பொலிஸார் நேற்றையதினம் (13) மனு தாக்கல் செய்துள்ளனர்.

அந்த மனு மீதான விசாரணைகளை எதிர்வரும் 18ஆம் திகதி முன்னெடுப்பதாகவும் அன்றைய தினம் மனுவில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள செல்வராசா கஜேந்திரன் மற்றும் விஸ்வலிங்கம் மணிவண்ணன் ஆகியோரை மன்றில் முன்னிலையாகுமாறு மன்று கட்டளையிட்டுள்ளது.