தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுத்தப்படும் சிறுவர்கள்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

0
47

எதிர்வரும் 21ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு ஜனாதிபதி வேட்பாளர்கள் நாடு முழுவதும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதுடன் அவர்களை ஆதரித்து பல்வேறு பிரச்சார நடவடிக்கைகளும் இடம்பெற்று வருகின்றன.

இந்த நிலையில் தேர்தல் பிரச்சாரத்திற்கு குழந்தைகளை பயன்படுத்துவது தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் சமீபகாலமாக பரவி வருகிறது.

பிரச்சார நடவடிக்கைகளில் சிறுவர்கள் ஈடுபடுத்தப்படுவதாக தேசிய சிறுவர்கள் பாதுகாப்பு அதிகார சபைக்கு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

இதுகுறித்து அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ள தேசிய சிறுவர்கள் பாதுகாப்பு அதிகார சபை, சிறுவர்களை தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவது பாரிய குற்றமாகும்.

ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரங்களில் பல்வேறு வன்முறைகள் பதிவாகி வருகின்றன. இது சிறுவர்களை ரீதியான தாக்கங்களுக்கு உட்படுத்தும்.

எனவே 18 வயதுக்கும் குறைந்த சிறுவர்களை பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படுவதை தவிர்க்க வேண்டும்.” எனவும் கோரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை “சுரகிமு தருவன்” தேசிய இயக்கம் தேர்தல் ஆணைக்குழுவில் சிறுவர்கள் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படுவது குறித்து முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளது.

அத்துடன் தேர்தல் நடவடிக்கைகளுக்கு சிறுவர்களை பயன்படுத்த வேண்டாம் என தேர்தல் கண்காணிப்பு அமைப்பு அரசியல் கட்சிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.