இந்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டுக்கு அதிகளவான தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் கடந்த ஒகஸ்ட் 27ஆம் திகதி அரசு முறை பயணமாக அமெரிக்காவுக்கு அரசு முறைப் பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.
இப்பயணத்தில் உலகின் 18 முன்னணி நிறுவனங்களுடன் ரூபாய் 7,616 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன.
மேலும் உலகளாவிய ரீதியில் பல முன்னணி நிறுவனங்களின் உயர் அலுவலர்களை சந்தித்து, தமிழ்நாட்டில் புதிய தொழில் முதலீடுகளைச் செய்யவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து அமெரிக்காவின் RGBSI நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. 19 நாட்கள் அமெரிக்க பயணத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு இந்தியாவுக்கு மு.க.ஸ்டாலின் புறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.