வேலைத்திட்டம் வலுவாக உறுதிப்படுத்தப்படும்:  ஜனாதிபதி நம்பிக்கை

0
43

இன்னும் 20 வருடங்களில் சிறந்த நாட்டில் வாழ முடியும் என்ற நம்பிக்கையை இந்நாட்டு இளைஞர்களுக்கு வழங்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

திருக்கோவில் பிரதேசத்தில் இடம்பெற்ற ‘ரணிலால் இயலும்’ வெற்றிப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.

செப்டெம்பர் 21ஆம் திகதி நாட்டை உருவாக்க எரிவாயு சிலிண்டருக்கு வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்திய ஜனாதிபதி, சஜித்துக்கும் அநுரவுக்கும் நாட்டைக் கட்டியெழுப்ப எந்த திட்டமும் இல்லை எனவும் அவர்களிடம் நாட்டை ஒப்படைத்தால் நாட்டின் பொருளாதாரம் மீண்டும் வீழ்ச்சியடையும் எனவும் தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதாரம் மீண்டும் சீர்குலைந்தால் நாட்டின் எதிர்காலம் தொடர்பில் எவராலும் நம்பிக்கை வைக்க முடியாது என ஜனாதிபதி வலியுறுத்தினார்.

கடந்த இரண்டு வருடங்களில் இந்த நாட்டின் வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை மீட்டெடுத்து அனைவரும் வாழக்கூடிய நாட்டை உருவாக்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

அடுத்த 05 வருடங்களில் இந்த வேலைத் திட்டத்தை வலுவாக அமுல்படுத்தி நாட்டின் பொருளாதார பிரச்சினைக்குத் தீர்வுகாண நடவடிக்கை எடுப்பேன் என தெரிவித்த ஜனாதிபதி, மக்கள் தமது பிள்ளைகளின் மற்றும் நாட்டின் எதிர்காலத்திற்கான வேலைத்திட்டத்திற்கு ஆதரவளிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.