விடுதலைப் புலிகள் ஓயவில்லை: மகிந்தவை கொலை செய்ய சதி என்கிறார் திஸ்ஸ குட்டியாராச்சி

0
48

விடுதலைப் புலிகள் அமைப்பு தோற்கடிக்கப்பட்டாலும், அதன் அலை இன்னும் ஓயவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை கொலை செய்வதற்கான சதித்திட்டம் இன்னமும் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்சவின் வெற்றிக்காக ஹிரியாலையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

எதிர்வரும் 21ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்று அனுரகுமார திஸாநாயக்க, மகிந்த ராஜபக்வின் பாதுகாப்பை நீக்கி உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேற்றினால் அவரின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடும்.

காலி முகத்திடல் தாக்குதல் இடம்பெற்ற மே ஒன்பதாம் திகதி அலரி மாளிகையில் வைத்து மகிந்த ராஜபக்சவை கொல்வதற்கான ஆயத்தங்கள் இருந்தன.

எனினும் திருகோணமலை கடற்படை முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டு அவர் உயிரை காப்பாற்றியதாக திஸ்ஸ குட்டியாராச்சி மேலும் தெரிவித்துள்ளார்.