பெருவின் முன்னாள் ஜனாதிபதி: ஆல்பர்டோ புஜிமோரி காலமானார்

0
50

மனித உரிமை மீறல்கள் மற்றும் ஊழலில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட பெருவின் முன்னாள் ஜனாதிபதி ஆல்பர்டோ புஜிமோரி Alberto Fujimori அவரது 86ஆவது வயதில் காலமாகியுள்ளார். இவர் 1990 மற்றும் 2000க்கு இடையில் பெருவை ஆட்சி செய்தார்.

புஜிமோரி அவரது பதவிக் காலத்தில் பொருளாதாரத்தை சிறந்த பாதையில் கொண்டு சென்றதன் மூலமும் வன்முறை கிளர்ச்சியைத் தணித்ததன் மூலமும் பிரபலமடைந்தார்.

எனினும் ஆட்சிக் காலத்தில் இடதுசாரி கெரில்லா கிளர்ச்சிக்கு எதிரான அவரது கடுமையான நிலைப்பாடு மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளையும் கொண்டு வந்தது.

பெரு கிளர்ச்சியின்போது அவர் நாட்டை விட்டு வெளியேறினார். பின்னர் கைது செய்யப்பட்டு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.