அடிக்கடி நிறம் மாறும் பச்சோந்தி பற்றி கேள்விப்பட்டிருப்போம். ஆனால் அடிக்கடி நிறத்தை மாற்றிக்கொள்ளும் கிளி மீன் (Parrot fish) பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
பவளப்பாறை வாழ்விடங்களில் வாழும் இந்த மீன்களில் 80 இனங்கள் காணப்படுகின்றன. உலகில் வலிமையான பற்களைக் கொண்ட உயிரினங்களில் ஒன்றாக இந்த கிளி மீன்கள் உள்ளன. ஒவ்வொரு மீனுக்கும் 1000 பற்கள் வரையில் இருக்கும் என கூறப்படுகிறது.
பவளம் மற்றும் பாசி இதன் பிரதான உணவு. தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக தாம் இருக்கும் இடத்துக்கு ஏற்றவாறு தங்கள் நிறத்தை மாற்றிக்கொள்ளும்.
சில கிளி மீன்கள் அதன் செதில்களில் சுரக்கும் சளியைக் கொண்டுள்ளன. இவை இரவு நேரங்களில் தங்களை தற்காத்துக்கொள்ள ஒரு ஒட்டும் கூட்டை உருவாக்கிக் கொள்கின்றன.