உலக புகழ்பெற்ற பாப் பாடகி டெய்லர் ஸ்விஃப்ட் ஐ கர்ப்பமாக்குவதாக மிரட்டல் சரச்சையில் சிக்கினார் எலான் மஸ்க். இந்நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் கமலா ஹாரிஸ்க்கு வாக்களிக்கப் போவதாக உலக புகழ்பெற்ற பாப் பாடகி டெய்லர் ஸ்விஃப்ட் தெரிவித்துள்ளார்.
டெய்லர் ஸ்விஃப்ட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பூனையுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அவரது இன்ஸ்டா பதிவில், தான் நம்பும் உரிமைகளுக்கு ஆதரவாக கமலா ஹாரிஸ் போராடி வருவதால் அவருக்கு வாக்களிக்கப் போவதாக பதிவிட்டுள்ளார்.
33 வயதான டெய்லர் ஸ்விஃப்ட் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை. ஆதலால் அவருக்கு குழந்தைகள் இல்லை. அதை குறிக்கும் விதமாக Taylor Swift – Childless Cat Lady என்று தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில் டெய்லர் ஸ்விஃப்ட்டின் இன்ஸ்டா பதிவை கிண்டலடிக்கும் விதமாக எலான் மஸ்க் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், “நீங்கள் வென்றுவிட்டிர்கள் டெய்லர், நான் உங்களுக்கு ஒரு குழந்தையை தருகிறேன். அதோடு உங்கள் பூனையை என் வாழ்நாள் முழுவதும் பாதுகாக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார். எலான் மஸ்க்கின்பதிவுக்கு நெட்டிசன்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.