தமிழகத்தில் ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுத்த த.வெள்ளையன் மரணம்

0
121

தமிழகத்தில் ஈழத்தமிழர்களுக்காக குரல்கொடுத்த தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவை தலைவர் த.வெள்ளையன் காலமானார். இந்நிலையில் அவரது மறைவுக்கு தமிழீழ தேசியகொடி வைத்து அஞ்சலி ம்செலுத்தப்பட்டுள்ளது.

ஈழ மக்கள் மீது பெரும் பற்றுக் கொண்ட அவரது மறைவுக்கு பல்வேறு தமிழக அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 76 வயதான வெள்ளையன், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் காலமாகியுள்ளார்.

முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள இரங்கல் குறிப்பில், வணிகர் பெருமக்களின் நலனுக்காக உழைத்தவர் வெள்ளையன் என புகழாரம் சூட்டியுள்ளார். வெள்ளையனின் குடும்பத்தினர் உள்ளிட்டவர்களுக்கு ஆறுதலைத் தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில், வணிகர்களின் நலனுக்காக அல்லும் பகலும் பாடுபட்டவர் வெள்ளையன் என குறிப்பிட்டுள்ளார். வெள்ளையனின் குடும்பத்தினருக்கு இரங்கலையும் தெரிவித்துள்ளார்.