போதையில் அநாகரீகமாக நடந்து கொண்ட ஆசாமி: உள்ளாடையுடன் தூக்கிச் சென்ற பொலிஸார்

0
42

அளவுக்கு அதிகமாக மது அருந்திய நபர் ஒருவர் திவுலப்பிட்டி பேருந்து நிலையத்திற்கு முன்பாக உள்ள நெடுஞ்சாலையில் அநாகரீகமாக நடந்து கொண்ட போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குடிபோதையில் சந்தேகநபர் பிரதான வீதியில் பயணிக்கும் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஏனைய வாகனங்களுக்கு இடையூறு விளைவித்ததுடன், அநாகரீகமாக நடந்து கொண்டதாகவும் பின்னர் உள்ளாடையை மட்டும் அணிந்து கொண்டு தனியார் பேருந்தில் ஏறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது பேருந்து நடத்துடனர் அவரை கீழே இறக்கிவிட முயற்சித்த போதிலும் அது முடியாமல் போனது. பின்னர் அவ்விடத்திற்கு வந்த திவுலப்பிட்டி பொலிஸ் உத்தியோகத்தர் சந்தேக நபரை பேருந்தில் இருந்து இறக்கி பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார்.

குறித்த நபர் தொடர்பில் நகரவாசிகள் திவுலபிட்டிய பொலிஸாருக்கு வழங்கிய அறிவித்தலின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபரை இன்று (11) மினுவாங்கொடை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.