டுபாய் ஜனாதிபதியின் மகள் ஷைக்கா மஹ்ரா பின்த் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவரது கணவர் ஷேக் மனா பின் முகமது பின் ரஷித் பின் மனா அல் மக்தூமை விவாகரத்து செய்வதாக இன்ஸ்டாவில் கடந்த ஜூலை மாதம் அறிவித்திருந்தார்.
இவரது விவாகரத்து விவகாரம் பெரும் வைரலானது. காரணம் அவர் விவாகரத்தை அறிவித்த முறை மிகவும் வித்தியாசமானது. இந்நிலையில் தற்போது ‘Divorce’ எனும் பெயரில் வாசனைத் திரவிய நிறுவனமொன்றை தொடங்கியுள்ளார்.
இந்த வாசனைத் திரவியம் அவரது விவாகரத்துடன் நேரடி தொடர்பை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வித்தியாசமான பெயர் அனைவரையும் கவர்ந்துள்ளது.