வசூலில் பட்டைய கிளப்பிய விஜய்: கோட்டில் நீக்கப்பட்ட காட்சிகள் ஓடிடியில் ரிலீஸ்

0
128

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோட் திரைப்படம் செப்டம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.

ரூ.400 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட கோட் திரைப்படம் நான்கு நாட்களில் ரூ.288 கோடியை வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ள நிலையில் ஐந்தாம் நாள் வசூல் குறித்த தகவலை பார்க்கலாம்.

ஐந்தாம் நாளான நேற்று வேலை நாட்களாக இருந்த போதும் ரூ14 கோடி வசூலித்து, கோட் திரைப்படம் ரூ 300 கோடியை தாண்டி உள்ளது.

இதனை விஜய்யின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். கோட் திரைப்படம் ஏற்கனவே 3 மணி நேரமாக இருக்கும் நிலையில், படத்தின் நீளம் கருதி, நீக்கப்பட்ட காட்சிகள் அனைத்தையும் ஓடிடியில் இணைக்க படக்குழு முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. இதனால் ஓடிடியில் மூன்றரை மணி நேரம் ஓடக்கூடிய படமாக ‘தி கோட்’ திரைப்படம் இருக்கும் என படக்குழு தெரிவித்துள்ளது.

இதில் படத்தில் விஜய் சென்றவுடன் சிவகார்த்திகேயன் – மோகன் இருவருக்கும் இடையே நடந்த உரையாடல் காட்சியும் அடங்கும் என்று இயக்குநர் வெங்கட்பிரபு தெரிவித்துள்ளார். வெளியாகி உள்ள இந்த தகவலால் ஓடிடியில் கோட் படத்தை பார்க்க தளபதியின் ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.