கிழக்கில் தமிழ் பொது வேட்பாளர் தேர்தல் பிரசாரத்தை இடைமறித்த காவல்துறையினர்

0
49

அம்பாறையில் (Ampara) தமிழ் பொதுவேட்பாளரின் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு காவல்துறையினர் இடையூறு விளைவித்துள்ளனர்.

கல்முனை – நீலாவணை பகுதியில் சற்று முன்னர் காவல்துறையினர் இவ்வாறு குழப்பம் விளைவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிறிலங்கா ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராக களமிறங்கியுள்ள பா.அரியநேத்திரன் (P. Ariyanethiran) தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக நேற்று (09) கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

இந்த நிலையில் கிழக்கில் பொதுவேட்பாளருக்கு மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது. ஜனாதிபதி தேர்தல் நெருங்கும் நிலையில் தேரதல் பிரசாரங்கள் சூடுபிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.