ஷேக் ஹசீனாவை மீண்டும் அழைத்து வர தீர்மானம்: நெருக்கடியை மேலும் வளர்க்குமா?

0
41

பங்காதேஷில் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வர புதிய அரசாங்கம் தயாராகி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பங்களாதேஷ் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது.

மாணவர் போராட்டத்திற்கு எதிராக அரசு அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததற்காகவும், பயங்கரவாதத்தை நடத்தியதாகவும் அவர் மீது அந்நாட்டு நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஹசீனாவின் அரசுக்கு எதிரான மாணவர் போராட்டங்களுக்கு மத்தியில், அவர் பிரதமர் பதவியைத் துறந்து இந்தியாவுக்குத் தப்பிச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

ஷேக் ஹசீனா, இந்தியாவில் அரசியல் தஞ்சம் கோரி, ஆகஸ்ட் 5ஆம் திகதி இராணுவ ஹெலிகாப்டரில் புது டெல்லிக்கு தப்பிச் சென்றார். இதனால் இரு நாடுகளுக்கும் இடையேயான தூதரக உறவும் நெருக்கடியில் சிக்கியது.

தற்போது இந்தியாவில் அரசியல் பாதுகாப்பு பெற்று வரும் பங்களாதேஷின் முன்னாள் பிரதமரை மீண்டும் அழைத்து வருவதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இது நெருக்கடியை மேலும் வளர்க்கும் என அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

ஹசீனா அரசாங்கத்தின் கீழ் பங்களாதேஷ் மற்றும் இந்தியா இடையே குற்றவியல் அடிப்படையில் நாடு கடத்தப்பட்டவர்களை பரிமாறிக்கொள்வதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.

பாகிஸ்தானுக்கு எதிரான 1971 சுதந்திரப் போரின் போது நடந்த குற்றங்களை விசாரிக்க 2010 இல் பங்களாதேஷ் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தையும் நிறுவினார்.