பெருதோட்டத் தொழிலாளர்களுக்கு இன்றுமுதல் 1350 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்க கம்பனிகள் இணங்கியுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது,
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு இன்று முதல் கட்டாயமாக 1350 ரூபாய் அடிப்படை சம்பளம் வங்கப்பட்டுள்ளது. அதை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை மேற்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னாள் தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கிறோம்.
”முதல் கட்டமாக இன்றைய தினம் தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளமாக 1350 ரூபாய் வழங்கப்படும். மிகுதி 350 ரூபா பேச்சுவார்த்தைகளின் ஊடாக பெற்றுக் கொடுக்கப்படும்.” என்றும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன் சம்பளத்தை பெற்றுக்கொடுக்க ஒத்துழைப்பு வழங்கிய இலங்கை தொழிலாளர் காங்கிரசின் உறுப்பினர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.