யூடியூப் பார்த்து அறுவை சிகிச்சை செய்த போலி வைத்தியர்; பரிதாபமாக உயிரிழந்த சிறுவன்!

0
45

இந்தியாவில் யூடியூபைப் பார்த்து அறுவை சிகிச்சை செய்த போலி வைத்தியரினால் 15 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் பீகார் மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருதாவது,

பீகார் மாநிலத்தில் 15 வயது சிறுவனுக்கு எற்பட்ட பித்தப்பை கல்லை அகற்றுவது எப்படி என்பதை குறித்த போலி வைத்தியர் யூடியூப்பை பார்த்து அறுவை சிகிச்சை செய்துள்ளார்.  இதனால் குறித்த சிறிவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

மேலும், தமது ஒப்புதலின்றி குறித்த போலி வைத்திய அறுவை சிகிச்சையைத் தொடங்கியதாக குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த சம்பவத்தில் சிறுவன் உயிரிழந்ததைத் தொடர்ந்து குறித்த போலி வைத்தியர் தலைமறைவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி தலைமறைவான போலி வைத்தியர் தொடர்பிலான விசாரணைகளை பீகார் பொலிஸார் முன்னெடுத்து வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.