பிளாஸ்டிக் கழிவுகள் உற்பத்தியில் இந்தியா முதலிடம்

0
107

உலக நாடுகள் அனைத்திலும் ப்ளாஸ்டிக் கழிவுகளை குறைப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் பூமியை மாசுப்படுத்தும் ப்ளாஸ்டிக் கழிவுகளை உற்பத்தி செய்வதில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.

இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் 93 இலட்சம் தொன் ப்ளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுகின்றன என நேச்சர் ஜெர்னல் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

உலகளாவிய ரீதியில் ஐந்தில் ஒரு பங்கு ப்ளாஸ்டிக் கழிவுகள் இந்தியாவில் தான் உருவாகின்றன. அதுமட்டுமின்றி ஒவ்வொரு நபரும் தினசரி 120 கிராம் ப்ளாஸ்டிக் கழிவுகளை உற்பத்தி செய்கின்றனர்.

அதன்படி இந்தியாவுக்கு அடுத்ததாக நைஜீரியாவில் 35 இலட்சம் தொன் ப்ளாஸ்டிக் கழிவுகளும் இந்தோனேஷியாவில் 34 இலட்சம் தொன் ப்ளாஸ்டிக் கழிவுகளும் கொட்டப்படுகின்றன.

இந்த வரிசையில் நான்காவது இடத்தை சீனா பிடித்துள்ளது. ஆரம்பத்தில் இந்த வரிசையில் சீனாதான் முதலிடத்தில் இருந்தது. ஆனால் தற்போது அந் நாட்டில் மேற்கொள்ளப்படும் கழிவு மேலாண்மையால் சீனாவில் ப்ளாஸ்டிக் கழிவுகளின் அளவு குறைந்துள்ளது.