மகளின் தலையில் கமராவை மாட்டிய தந்தை; சர்ச்சையை எற்படுத்திய வீடியோ!

0
43

பாகிஸ்தான் நாட்டில் தனது மகளின் தலையில் கமராவை பொருத்தி 24 மணித்தியாலங்களும் கண்காணிக்கும் தந்தையின் செயல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தந்தையின் செயல் தொடர்பில் செய்தியாளருக்கு தலையில் கமராவுடன் அந்த பெண் பேட்டி அளித்த காணொளி இணையத்தில் விவாதத்தை கிளப்பியுள்ளது.

குறித்த வீடியோவில் தனது பாதுகாப்புக்காகத் தந்தை தனது தலையில் செக்யூரிட்டி கமராவை பொறுதியுள்ளார். இந்த கமராவுக்கான அக்ஸஸுடன் வீட்டில் இருந்தபடியே அவர் தான் எங்கெல்லாம் செல்கிறேன் என்ன செய்கிறேன் என்பதை கண்காணித்து வருகிறார் என்றும் அந்த பெண் தெரிவித்துள்ளார். 

இது உங்களுக்கு அசௌகரியமாக இல்லையா என்ற கேள்விக்கு பதிலளித்த அந்த இளம்பெண் எனது தந்தையின் முடிவுக்கு நான் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை. அவர் எது செய்தலும் எனது நல்லதற்கு தான் செய்வார் என்று தெரிவித்துள்ளார்.