சுயாதீன வேட்பாளர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணம் திருநெல்வேலிசந்தைப் பகுதியில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரனால் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
திருநெல்வேலி சந்தை பகுதியிலுள்ள மக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு இன்று சனிக்கிழமை காலை துண்டுப்பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன. இதன் போது விஜயகலா மகேஸ்வரன் மற்றும் கட்சி ஆதரவாளர்கள் ஆகியோர் துண்டு பிரசுரங்களை விநியோகித்தனர்.
நாடு பொருளாதார நெருக்கடியில் இருந்தபோது அதனை ரணில் விக்ரமசிங்கவே மீட்டெடுத்ததாகவும் சர்வதேச நாடுகளில் செல்வாக்கு மிக்கவர் என்றும் விஜயகலா கூறினார்.
பிரபாகரன் காலத்திலும் கூட அவர் நாட்டுக்கு பல்வேறு சேவைகளை செய்தவர் எனவே அவரை ஆதரிக்க வேண்டும் என்றும் விஜயகலா கோரிக்கை விடுத்தார்.