வீடு வீடாக செல்லவுள்ளார் நாமல்: இன்று தொடக்கம் ஆரம்பம்

0
47

மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடவுள்ள நாமல் ராஜபக்சவினால் முன்வைக்கப்பட்டுள்ள “நாமல் தெக்ம“ வேலைத்திட்டம் தொடர்பில் வீடு தோறும் சென்று விளக்கமளிக்கவுள்ளார். இன்று முதல் நாடு முழுவதும் இந்த செயற்பாட்டை ஆரம்பிக்கவுள்ளதாக கட்சி தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாடு முழுவதும் காணப்படும் 13628 தேர்தல் காரியாலயங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இந்த வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று சுப நேரத்தில் இதனை ஆரம்பிக்கவுள்ளதாக கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் சுயாதீன வேட்பாளராக போட்டியிடவுள்ள தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கும் அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு விளக்கமளிக்கும் வேலைத் திட்டம் நேற்று (06) ஆரம்பிக்கப்பட்டது.