மோடியை சந்தித்த ஜடேஜா: பாஜகவில் இணைந்தார்

0
105

இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரவீந்திர ஜடேஜா பாஜகவில் இணைந்துள்ளார். அவரது மனைவியும், சட்டமன்ற உறுப்பினர் ரிவாபா ஜடேஜா தனது எக்ஸ் தளத்தில் இதனை அறிவித்துள்ளார்.

கடந்த 02 ஆம் திகதி பாஜக உறுப்பினர் சேர்க்கைக்காக சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. இதன்போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது கட்சி உறுப்பினர் பதவியை புதுப்பித்தார்.

இந்த சிறப்பு முகாமில் ரவீந்திர ஜடேஜா பாஜகவில் இணைத்துக் கொண்டார். அண்மையில் நடைபெற்று முடிந்த டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில்,

சர்வதேச டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா அறிவித்த நிலையில் பாஜகவில் இணைந்துள்ளார்.

ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜா 2019 ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்துக்கொண்டார். இதனைத் தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற குஜராத் சட்டப் பேரவைத் தேர்தலில் ஜாம்நகர் வடக்கு தொகுதியில் போட்டியிட்டார்.

அவருக்காக ரவீந்திர ஜடேஜா பிரச்சாரம் செய்தார். அந்த தேர்தலில் ரிவாபா தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சி வேட்பாளரை விட 50 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.