தொழில்நுட்பத்தின் வளர்ச்சி நன்மையும் செய்கிறது அதேவேளை தீமையும் செய்கிறது. அந்த வகையில் ரொபோ நாய் ஒன்று சோதனை முயற்சியின்போது யூடியூபர் ஒருவரை நெருப்புத் துப்பாக்கியால் சுட்டுள்ளது. குறித்த யூடியூபர் அண்மையில் ரொபோ நாய்க்குட்டியொன்றை வாங்கியுள்ளார்.
அந்த ரொபோ நாய்க்குட்டியின் இயக்கத்தை நேரடியாக ஒன்லைனில் பரிசோதித்துள்ளார். அதில் முதலில் ரொபோ நாய்க்கு கை கொடுக்கிறார். நாயும் முன்னங்காலை தூக்கி கைகொடுத்தது. பின்னர் ரொபோவில் இணைக்கப்பட்டுள்ள துப்பாக்கிப் பட்டனை அழுத்திவிட்டு குரைக்கும்படி கட்டளையிட்டார். ஆனால் ரொபோ நாய் எஜமானரை எதிரியாகக் கருதி துப்பாக்கியால் சுடத் தொடங்கியது.
அவர் சட்டென நீச்சல் குளத்தில் குதித்துவிட்டார். தொடர்ந்தும் அவரை சுட்டுக்கொண்டிருந்த ரொபோ நாயின் பார்வையிலிருந்து தப்பி பின்பக்கமாக வந்து அந்த பட்டனை நிறுத்திய பிறகுதான் ரொபோ நாய் சுடுவதை நிறுத்தியது. என்னதான் அவர் உயிர் பிழைத்திருந்தாலும் அந்தச் சூடு அவர் மீது பட்டிருந்தால் எதுவேண்டுமானாலும் ஆகியிருக்கலாம்.
https://www.instagram.com/reel/C_biUQsRFzS/?utm_source=ig_web_copy_link