ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்து வவுனியா நகரில் பிரச்சாரநடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன. இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தானின் தலைமையில் குறித்த நடவடிக்கை இன்று காலை இடம்பெற்றது.
இதன்போது வவுனியா தினச்சந்தை, நகர வர்த்தக நிலையங்களுக்கு சென்ற இராஜாங்க அமைச்சர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவினை வழங்குமாறு வர்த்தகர்களிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார். இதேவேளை குறித்த நடவடிக்கை நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் காலை ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது கருத்து தெரிவித்த அவர்,
ரணில் விக்கரமிசிங்கவை மீண்டும் ஜனாதிபதி ஆக்குவதற்கு எமது மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருப்பதனை அவதானிக்கின்றோம்.
அவர் அதிக பெரும்பான்மையான வாக்குகளை பெற்று வெற்றி பெறுவார். அதற்கான சந்தர்ப்பங்களே இருக்கின்றது. வீழ்ச்சியடைந்த நாட்டினை ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது அவர் மிக விரைவாக மீட்டிருந்தார்.” எனத் தெரிவித்தார்.