ஹொலிவுட் நடிகர் ஷாருக்கனை நெருங்கிய நடிகர் விஜய்! எதில் தெரியுமா?

0
107

இந்தியாவில் அதிக வருமான வரி செலுத்தும் நட்சத்திரங்களின் பட்டியலை Fortune India வெளியிட்டுள்ளது. இதன்படி வரி செலுத்தும் நபர்களில் முதலிடத்தை ஹொலிவுட் நடிகர் ஷாருக்கான் உள்ளார்.

வருமான வரியாக அவர் ஆண்டிற்கு 92 கோடி ரூபாய் செலுத்தி வருகின்றார். இதனைத் தொடர்ந்து, இரண்டாவது இடத்தில் நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் உள்ளார்.

இவர் ஆண்டிற்கு 80 கோடி ரூபாய் வருமான வரி செலுத்துகிறார். மூன்றாவது இடத்தில் ஹொலிவுட் நடிகர் சல்மான்கான், ஆண்டிற்கு வருமான வரியாக 75 கோடி ரூபாய் செலுத்துகிறார்.

4வது இடத்தில் நடிகர் அமிதாப் பச்சன் 71 கோடி ரூபாவும், 5 வது இடத்தில் உள்ள கிரிக்கெட் வீரர் விராட் கோலி 66 கோடி ரூபாவும் வருமான வரியாகச் செலுத்துகின்றனர்.

6வது இடத்தில் உள்ள ஹொலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் 42 கோடி ரூபாவும், 7வது இடத்தில் கிரிக்கெட் வீரர் மகேந்திரசிங் தோனி 38 கோடி ரூபாவும் வருமான வரியாகச் செலுத்துகின்றனர்.