தமிழ் தேசிய பொதுக்கட்டமைப்பின் வவுனியா மாவட்ட நிதிப் பொறுப்பாளரான ஒரு அரசியல்வாதி தனது முகநூலில் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குச்சீட்டை பொதுவேட்பாளருக்கு புள்ளடி இடப்பட்டவாறு பகிர்ந்துள்ளார்.
இன்றையதினம் (0-09-2024) 2வது நாளாக தபால் மூல வாக்களிப்பு இடம்பெற்று வரும் நிலையில், குறித்த அரசியல் பிரமுகர் வாக்குச்சீட்டை சமூக வலைதளமான முகநூலில் பகிர்ந்துள்ளது தேர்தல் விதிமுறைகளை மீறியுள்ள செயல்பாடு என தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், குறித்த பதிவிற்கு எதிராக வவுனியா மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர், ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு குழுவிடமும், தேர்தல் கண்காணிப்பு குழுக்களிடமும் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அறியப்படுகிறது.