அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரி இதுவரை தீர்வு வழங்கப்படாத விண்ணப்பங்கள் விரைவாக விசாரிக்கப்பட்டு தீர்வு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்தக் கோரிக்கையை கிராஸ்பெஞ்ச் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று, பிரதமர் அன்டனி அல்பனீஸிடம் முன்வைத்துள்ளனர்.
அவுஸ்திரேலியாவில் நீண்டகாலமாக அகதி கோரிக்கை விடுக்கப்பட்ட போதும், இதுவரை முடிவு அறிவிக்கப்படாத தமிழர்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த போராட்டத்தை முன்னெடுத்து வந்த இலங்கையைச் சேர்ந்த 23 வயதான மனோ யோகலிங்கம் மனவிரக்தி காரணமாக, பொதுவெளியில் உயிரை மாய்த்தார். இதனையடுத்து அவுஸ்திரேலியாவில் அகதி தொடர்பான கோரிக்கை குறித்து தீவிர கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறான நிலையில் விசா பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ள அகதிகளுக்கு நிரந்தர உரிமையை வழங்குமாறு கோரி 25 கூட்டரசு நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு பிரதமர் மற்றும் குடிவரவு அமைச்சருக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளது.
அவுஸ்திரேலியாவில் விசா கோரிய நிலையில் காத்திருக்கும் அகதிகளின் எண்ணிக்கை எட்டாயிரத்தையும் தாண்டுவதாக அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.