தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய வெளியுறவு அமைச்சருக்கு கடிதம் ஒன்று அனுப்பியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது தொடர்பிலேயே குறித்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளாதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும் அவர்களது படகுகளையும் விடுவிக்குமாறு வலியுறுத்தி, தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு மீண்டும் கடிதம் அனுப்பியுள்ளார்.
அவர் அனுப்பிய கடிதத்தில் தமிழக மீனவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள அபராத தொகையை தள்ளுபடி செய்யுமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன் இராஜதாந்திர மட்டத்தில் நடவடிக்கை எடுக்குமாறும் குறித்த கடிதத்தில் மு.க ஸ்டாலின் கோரியுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.