உயிரிழந்த மகன்களின் உடலை தோளில் சுமந்து 15 கி.மீ நடந்து சென்ற பெற்றோர்!

0
66

இந்தியாவில் உள்ள பகுதியொன்றில் உயிரிழந்த தனது மகன்களின் சடலங்களைப் பெற்றோர் தோள் மீது வெகுதூரம் சுமந்து சென்ற சம்பவம் ஒன்று பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மகன்களை சரியான நேரத்திற்கு வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்ல முடியாததால், பெற்றோர் தங்களது இரண்டு மகன்களையும் பறிகொடுத்துள்ளார்.

சரியான நேரத்தில் சிகிச்சை வழங்கப்படத நிலையில், இருவரின் உடல்நிலையும் திடீரென மோசமானது. அடுத்த ஒரு மணித்தியாலத்தில் இருவரும் உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இதையடுத்து உயிரிழந்த மகன்களின் சடலங்களை அவர்களது கிராமத்திற்கு எடுத்துச் செல்ல முறையான நோயாளர் காவு வண்டி வசதி கூடச் செய்து கொடுக்கப்படவில்லை.

இதன் காரணமாக அவர்கள் தங்களது மகன்களின் சடலங்களை சுமார் 15 கிலோ மீற்றர்கள் வரை தோளில் சுமந்த படி நடந்து சென்றுள்ளனர்.

இதேவேளை குறித்த பெற்றோர் தங்களது பிள்ளைகளின் சடலங்களைத் தோளில் சுமந்து கொண்டு சேறு நிறைந்த காட்டுப் பாதையில் நடந்து செல்லும் காணொளியை அரசியல்வாதி சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் விஜய் வடேட்டிவார் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.