இலங்கைத்தீவின் தீர்மானமிக்க நாட்களை நாட்டு மக்கள் கடந்து வந்துக் கொண்டிருக்கும் நிலையில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களும் தங்களுடைய தேர்தல் பிரச்சாரங்களில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
சுயாதீன வேட்பாளராக களமிறங்கியுள்ள ரணில் விக்கிரமசிங்க தனது தேர்தல் பிரச்சாரச்சிற்கு இறுதி இரு வாரங்கள் மாத்திரமே போதுமாக இருக்கும் என தெரிவித்திருந்த நிலையில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தேர்தல் திகதியை அறிவிக்கும் முன்னரே உலகளாவிய ரீதியில் தனது தேர்தல் பிரச்சாரங்களை ஆரம்பித்திருந்தார்.
இந்நிலையில், அனுரகுமார திசாநாயக்கவின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை நிறைவு செய்துக் கொண்டு கம்பஹா, களுத்துறை மற்றும் நுகேகொடை ஆகிய நகரங்களில் பிரதான மூன்று பேரணிகளை நடத்த தீர்மானித்துள்ளதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைகள் நிறைவடையும் இம்மாதம் 18ஆம் திகதி குறித்த மூன்று பேரணிகளையும் நடத்த தீர்மானித்துள்ளனர்.