ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்கும் நோக்கில் பொதுஜன ஐக்கிய சுதந்திர முன்னணி என்ற புதிய கூட்டணியொன்று உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டணியின் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று வியாழக்கிழைமை கொழும்பு பத்தரமுல்லை வோட்டர்ச் ஹேஜ்ஜில் (Water’s Edge) இடம்பெற்றது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்கும் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்தே இந்தக் கூட்டணியை உருவாக்கியுள்ளனர்.
புதிய கூட்டணியின் தலைவராக பிரதமர் தினேஸ் குணவர்தன தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதுடன், பொதுச் செயலாளராக அமைச்சர் ரமேஷ் பத்திரன நியமிக்கப்பட்டுள்ளார்.
நிகழ்வின் போது, புதிய கூட்டணியின் சின்னமாக “கோப்பை” சின்னம் அறிவிக்கப்பட்டுள்ளதுடன், எல்பிடிய பிரதேச சபைக்கான தேர்தலை கோப்பை சின்னத்தில் சந்திக்க உள்ளதாக அங்குரார்ப்பண நிகழ்வில் உரையாற்றிய ரமேஷ் பத்திரன கூறினார்.