உக்ரைனின் வெளிவிவகார அமைச்சர் டிமிட்ரியோ குலிபா தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். நேற்றைய தினம் இரவும் ரஸ்ய படையினர் இஸ்ரேல் மீது கடுமையான தாக்குதல்களை நடத்தியிருந்தனர்.
இந்த தாக்குதல்களில் ஒரு சிறுவர் உள்ளிட்ட ஏழு பேர் கொல்லப்பட்டிருந்தனர். வெளிவிவகார அமைச்சரின் பதவி விலகலுடன் நாட்டில் பாரியளவிலான அமைச்சரவை மாற்றமொன்று மேற்கொள்ளப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
உக்ரைன் ஜனாதிபதி வொளொடிமிர் செலென்ஸ்கீ அமெரிக்கா விஜயம் செய்ய உள்ள நிலையில் வெளிவிவகார அமைச்சர் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.