ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் மகிழ்ச்சியாக இருந்த கோட்டாபய: சாணக்கியன் எம்.பி குற்றச்சாட்டு

0
42

இலங்கையை பொருளாதார ரீதியாக அழித்த பின்னர் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மகிழ்ந்ததாக இலங்கைத் தமிழ் அரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் குற்றம் சுமத்தியுள்ளார்.

2022ஆம் ஆண்டு பதவியில் இருந்து வெளியேற்றப்பட்ட கோட்டாபய ராஜபக்ச, ஐந்து நட்சத்திர ஹோட்டலில் சாப்பிட்டு மகிழ்ந்ததை தான் பார்த்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்

கோட்டாபய ராஜபக்சேவுக்கு வாக்களித்தவர்கள் இன்று நாட்டை விட்டு வெளியேறுகின்றனர். ஆனால் அவர் ஐந்து நட்சத்திர மற்றும் ஏழு நட்சத்திர ஹோட்டல்களில் தான் உணவு உண்கிறார்.

இதேவேளை, 2024 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் மூன்று முக்கிய வேட்பாளர்களும் இனவாதத்தை ஊக்குவிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த தேர்தல்களுடன் ஒப்பிடும் போது இந்த தேர்தலில் இது ஒரு நல்ல அறிகுறி எனவும் அவர் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், செப்டம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவளிக்க இலங்கைத் தமிழ் அரசு கட்சி தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.