ஈஸ்டர் தாக்குதல் – சந்தேகநபரை சந்தித்த மனுஷ நாணயக்கார: ஆதராம் இருப்பதாக கூறும் முஜிபுர்

0
22

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் ஐந்து வருடங்களாக வெலிகடை சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபரை சந்திப்பதற்காக முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார மற்றும் அஸ்லம் என்ற நபரும் சென்றுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

அவர்கள் சந்தேக நபரை மற்றொரு நபருக்கு எதிராக வாக்குமூலம் அளிக்குமாறு வலியுறுத்தியுள்ளதாகவும் முஜிபுர் ரஹ்மான் குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகக் கூறும் முஜிபுர் ரஹ்மான், இன்று வியாழக்கிழமை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) இந்த ஆதாரத்தை சமர்ப்பிக்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வொன்றிலேயே அவர் இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளார்.