தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபல ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார்.
கடந்த 7 ஆண்டுகளாக பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நடிகர் கமல்ஹாசன் திடீரென விலகுவதாக சமீபத்தில் அறிவித்தார்.
“சினிமா பணிகள் காரணமாக பிக் பாஸ் தமிழ் சீசனின் வரவிருக்கும் சீசனை என்னால் தொகுத்து வழங்க முடியவில்லை” என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதைதொடர்ந்து பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் அடுத்த தொகுப்பாளர் யார் என்ற கேள்வி எழுந்தது. 7 சீசனுக்கு பிறகு, பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போகும் புதிய தொகுப்பாளர் குறித்து ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்தது.
இந்நிலையில் பிக் பாஸ் 8 நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குவது தெரியவந்துள்ளது. இது தொடர்பான ப்ரோமோ வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.