தேர்தல் விதிமுறைகளை மீறி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக சுவரொட்டிகளை ஒட்டிய இருவரை நேற்று (03) 10,000 சுவரொட்டிகளுடன் கைது செய்ததாக வெலிகந்த பொலிஸார் தெரிவித்தனர்.
வெலிகந்த சந்துன்பிட்டிய பிரதேசத்தில் சுவரொட்டிகளை ஒட்டி வருவதாக தெரிவித்த பொலிஸார், சுவரொட்டிகளை ஒட்டிய நான்கு பேர் தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
சந்தேகநபர்கள் இருவரும் கெப் வண்டியின் சாரதி மற்றும் உதவியாளர் எனவும், அவர்கள் 22 மற்றும் 37 வயதுக்கு இடைப்பட்ட வெலிகந்த, போவத்த பிரதேசத்தில் வசிப்பவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைப்பற்றப்பட்ட சுவரொட்டிகள் கிட்டத்தட்ட ஐம்பது கிலோ எடையுள்ளவை எனவும் இது தொடர்பில் தேர்தல் அலுவலகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் வெலிகந்த பொலிஸார் தெரிவித்தனர்.
அதேவேளை கைப்பற்றப்பட்ட சுவரொட்டிகள் மற்றும் சந்தேகநபர்கள் இருவர் மற்றும் கெப் வண்டியை விடுவிக்குமாறு ஜனாதிபதியின் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள அரசியல்வாதிகளிடமிருந்து பொலிஸாருக்கு பல தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸ் அதிகாரிகள் குழு மேற்கொண்டு வருகின்றனர்.