இலங்கை ஜனாதிபதி தேர்தல் 2024; தபால் மூல வாக்களிப்பு ஆரம்பம்!

0
49

எதிர்வரும் 21ம் திகதி நடைபெறவுள்ள இலங்கையின் 9ஆவது ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று (04)  நாடளாவிய ரீதியில் ஆரம்பனாம நிலையில்  மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகவும் அமைதியான முறையில் ஆரம்பமானது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 13, 116 பேர் தபால்மூலம் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி ஜே.ஜே.முரளீதரன் தெரிவித்தார்.

இதன்படி, மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையம் உட்பட மாவட்டத்தில் இடங்களில் பொலிஸார் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், தேர்தல் திணைக்கள உத்தியோகத்தர்கள் வாக்களித்து வருகின்றனர். நாளையும் தபால்மூல வாக்களிப்பு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.